Monday, January 02, 2006

11. "இப்படியாக" - கருத்துகள்

அன்புடைய நண்பர் தங்கமணி அவர்களுக்கு,

உங்களுடைய தலைப்புப் பதிவைப் பார்த்தேன். அதில் உள்ள சில பாயிண்டுகள் குறித்து என் கருத்தைச் சொல்லலாம்ன்னு பாக்கிறேன்.

// ஊழலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஊழலுக்கான சாத்தியங்களாக நான் காண்கிற, உள்ளே ஏழ்மை நிறைந்த, புளுத்துப்போன, உள்ளீடற்ற, அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகள் எப்படி இன்றைய கல்வி முறையால், மதத்தால், அரசியலால் உண்டாக்கப்படுகின்றன என்றே பேசவிரும்புகிறேன்.//

ஊழலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை; ஏன். அது, கடவுள்போல் "அங்கிங்கெனாதபடி" பரவி புரையோடி இருக்குல்ல.

உள்ளே ஏழ்மை நிறைந்த, புளுத்துப்போன, உள்ளீடற்ற, அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகளால் ஏற்படுகின்றன. இன்றைய கல்வி முறையால், மதத்தால், மனிதன் அப்பிடி மாறலீங்க. அப்பறம் சொல்லி இருக்கீங்கல்ல அரசியல், அதாலதான் மனிதன் முதுகெலும்பு இல்லாம போயிட்டான்.

அப்புறம் ஒரு ரோடு போட்டா, மொத்த காண்டராக்ட் பணத்தில சத்தமில்லம 10% அந்த பகுதி மந்திரிக்கும், 5% மாவட்டத்துக்கும், 3%வட்டத்துக்கும்,2% சேர்மனுக்கும்,1% பஞ்சாயத்துத் தலைவருக்கும் போயிறுது. 21% போனப்புறம், இந்த காண்டிராக்ட் அந்த தலைவரின் தம்பிக்கோ, சேர்மனின் தம்பிக்கோ போயிருது. அதுல அவரு லாபம் 20%. இது இல்லாம நம்ம அரசு அதிகாரிகளுக்கும் குடுக்க வேண்டாமா? அதுக்கு ஒரு 19%. அப்புறம் எவ்வளவு மிச்சமுங்க. 40%. அதுலதான் ரோடு போடணூம். அது எத்தினி நாளைக்குத் தாங்கும்.

இவ்வளவும் தெரிஞ்சும் ஏங்க சும்மா இருக்கிறீங்க?ன்னு கேப்பீங்க. நான் பொண்டாட்டி புள்ளைக் காரனுங்க. மந்திரி போலீஸைக் கூப்பிட்டுச் சொன்னா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல. "***" கேசுல உள்ள தள்ளிருவாங்க. அப்பறம், தடிக்குச்சியோட ஆளுங்க வீட்ல வந்து போட்டு நொறுக்கிருவாங்க. மத்தவங்க, அதாங்க முதுகெலும்பு இல்லாதவங்க, பாத்துக்கிட்டு இருப்பாங்க.

இதத்தாங்க நீங்க "அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகள்" அப்பிடின்னு சொல்றீங்க. இது கல்வி முறையால் இல்லீங்க. மதத்தால் இல்லீங்க. அரசியலால்தானுங்க.

சரி நாம இதை எப்பிடி ஒழிக்கப்போறோம்?

//ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள், ஒரு பிறப்பு இறப்புச்சான்றிதழ் பெறுவதற்கான இறுதி செய்யப்பட்ட வழிமுறைகள் ஒரு குடிமகனின் மொழியில் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.//

இருக்கே. உங்களுக்குத்தான் தெரியலீங்க. VAOக்கு பத்து ரூபாய். ரெவெனியூ இன்ஸ்பெக்டருக்கு 20/-. தாசீல்தாருக்கு 100/-. அடுத்த நாளே வாங்கிறலாமுல்ல.

//தெய்வத்தின் குரல், நூறு வகையான அசைவச் சமையல், மனையடி சாஸ்திரங்கள், அர்த்தமுள்ள இந்துமதம்/ இனிய இஸ்லாம் போன்ற போலியான தகவல்கள் மக்கள் தங்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களைப் பெறுவதை மறித்து நிற்கின்றன.//

நூறு வகையான அசைவச் சமையல் படிச்சா நம்ம வீட்டில செஞ்சு சாப்டலாம்.

"தெய்வத்தின் குரல், அர்த்தமுள்ள இந்துமதம்/ இனிய இஸ்லாம் போன்ற போலியான தகவல்கள்" - ஒருத்தருக்குப் போலியாத் தெரியிறது மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். போலியானது என ஒட்டு மொத்தமா சொன்னா, அது எப்பிடீங்க. அதையும் அவுங்க அவுங்க புளாக்கிலதனே போடுறாங்க. தமிழ்மணத்தில வருகிற தலைப்பைப் பாத்து அது நமக்குப் புடிக்குதான்னு பாத்து அப்புறம்தான் உள்ளே வாராங்க. என்னோட "புலம்பல்" புளாக்குக்கு ஒருத்தரும் வாரதில்லே. நானும் புலம்ப்பிறதை நிறுத்திறதில்லே. அதுமாதிரி அரசியல் புடிச்சா அங்கேயும், காதல் புடிச்சா அங்கேயும் போறாங்க. இது எப்பிடிங்க மொத்த மனித இருப்புக்களைக் கெடுக்க முடியும்.

சாக்ரடீஸ் சொன்னானாம். "நான் என்ன கட்டிளங் காளையா; அல்லது இவர்கள் என்ன கன்னிப் பொண்களா? இவர்களை நான் கெடுக்க."

// பொதுத்தளத்தில் இருந்து அகற்றப்படவேண்டிய விசயங்களான ஆன்மீகம்//

வேண்டாமண்ணே. ஏதோ அதைப் படிச்சுத்தான் மக்கள் ஆறுதலைடையுறாங்க.

// மதத்தின் இருப்பு எப்படி இன்னும் சாத்தியமாகிறது, அதற்கான தேவை எப்படி கட்டமைக்கப்படுகிறது; அது எப்படி மனிதனுக்கு எதிரானது, அவனது ஆன்மீக விடுதலையை அது எப்படி முடக்குகிறது என்பது பற்றியே பேச, பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.//

மதம் இருக்கட்டுமண்ணே. அது மனுசனுக்கு எதிராளி இல்லை. ஆனா, மதத்தோட பேர வச்சிக்கிட்டு வம்பு பண்ணுறவனைக் கவனிக்கணுமண்ணே!. மதம் அடிப்படையான பல விஷயங்களச் சொல்லுது. அதனால மனம் பக்குவப்படுது. அவனோட "ஆன்மீக விடுதலை"க்கு வழி சொல்லுது; முடக்கலை.

ஆனா, அதுக்குள்ள, நான் அந்த சாதி, நீ அந்த சாதி அப்பிடிங்கிறதை மொதல்ல ஒழிப்போமண்ணே! அது செஞ்ச்சாலே பாதி குளோஸ். மீதி டிவிப் பொட்டிங்க. அத எண்ண பண்றதுதான்னு தெரியல.

ஏதோ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குச் சொல்லணுமுன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
அதிகமா படிக்கலைங்க. அதுனால, வாக்குவாதத்துக்கு வல்ல.

6 Comments:

மு மாலிக் said...

//என்னோட "புலம்பல்" புளாக்குக்கு ஒருத்தரும் வாரதில்லே. நானும் புலம்ப்பிறதை நிறுத்திறதில்லே//

இந்த வரிகளைப் படிச்சிட்டு யாராலும் சிரிப்பைக் கன்ட்ரோல் பண்ண முடியாது.

ஆனால் நான் உங்கள் ப்ளாக்-க்கு அடிக்கடி வர்றேன். கீப் புலம்பிங் சார். வழக்கமா குட்டி குட்டியா புலம்புவீங்க. இன்னிக்கு பேஜ் பேஜா இருக்கு ! ஏதும் பிரச்சனையா. (சும்மா விளையாடுறேன்).

சீமாச்சு.. said...

நல்ல பதில். தங்கமணி இன்னும் யோசிச்சு எழுதணும் இனிமேல.
ஊர்ல திருட்டு போயிட்டுன்னு சொன்னா.. "எல்லா வீட்டுலயும் டாக்டர்களும், வக்கீல்களும் இருக்காங்க. போலீஸ்காரங்க வந்து இருக்க இடமில்லை.. எல்லா டாக்டர்களையும், வக்கீல்களையும் முதலில் காலி பண்ணனும்"னு தங்கமணி எழுதுவார் போல இருக்கு.

"இப்படியெல்லாம் இருந்திருந்தால் நல்லா இருக்கும்" ன்னு யார் வேணுமின்னாலும் சொல்லலாம். "இனிமேல் இப்படியெல்லாம் செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும்" என்று சொல்ல ஒரு சமுதாயப் பொறுப்புணர்ச்சி வேணும். அது ரொம்ப சில பேரோட எழுத்துக்களில் தான் இருக்கு.
பாப்போம்.. தங்கமணி என்ன சொல்றாருன்னு...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Thangamani said...

//அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகள்" அப்பிடின்னு சொல்றீங்க. இது கல்வி முறையால் இல்லீங்க. மதத்தால் இல்லீங்க. அரசியலால்தானுங்க.//

சமூகக் கேடுகள் இருப்பதற்கான காரணங்களான பொய்யும், அச்சமும் நிறுவனபடுத்தபட்ட மதத்தினாலேயே உண்டாக்கப்படுகின்றன. ஊழல் அரசியல் என்பது மதத்தின் வேலையாட்களில் ஒன்று.

ஊழல் அரசியல்வாதிகள் என்பது தனி இனமல்ல; நம் ஒவ்வருவரின் உள்ளேயும் இருப்பவர்தான்.

சரியான கல்வி மட்டுமே அச்சத்தையும், பொய்யையும் நீக்கமுடியும்.

நன்றி!

பொன்னம்பலம் said...

குட்டி குட்டியா புலம்பறது ஏன்னா, நம்ம சணங்க இப்பிடி ஆயிட்டாங்களே! அப்பிட்டின்னுதான்.
ஆனா நம்ம தங்கமணி ஐயா சொன்ன விஷயம் பெரிசு.
நானும் ஒரு தடவை அடிப்பட்டிருக்கேன். அதுனாலதான் மனசில பட்டதை கொஞ்சமா சொல்லிபுட்டேன்.
உண்மையில, நான் மரியாதையா செய்யும் நகைச்சுவையை ரசிக்கிறவனுங்கோ!

மு மாலிக் said...

சார், நான் மரியாதைக் குறைவா ஏதும் சொல்ல நினைக்கவே யில்லை. மன்னிக்கவும். நீங்க விளையாட்டா எடுத்துக்குவீங்கன்னு நினைச்சேன். sorry

பொன்னம்பலம் said...

ஐயய்யோ! நானும் அப்பிடி எதுவும் நினைக்கலியே!
சந்தோஷமாத்தான் இருக்கேன்.