Thursday, December 22, 2005

4.நரி ஒன்று சிரிக்கிறது!

4.நரி ஒன்று சிரிக்கிறது! - அது நினைத்தது நடக்கிறது
தந்திரம் பலித்தபின் தவறுகள் வென்றபின் தண்டனை கிடைக்கிறது!!
அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒரு நாள்
படுத்தபின் எழமாட்டான்; அவனது கணக்கை
ஐந்தொகை போட்டு ஆண்டவன் விடமாட்டான்!!

பலருக்குச் சிலகாலம் - எதுவும் சிலருக்குப் பலகாலம்
எவருக்கும் ஒருகாலம் - உண்மை வெளிவரும் எதிர்காலம்!!

**** கவியரசு

2 Comments:

மு மாலிக் said...

ஆகா,.. என்ன அருமை ! .. முத்துமுத்தா.... சின்ன சின்ன கவிதைகளைப் பொட்டு இருக்கீங்க.. ஆனால் புலம்பல் என்று பேர் வச்சு இருக்கீங்களே !

பொன்னம்பலம் said...

ஆமாம். தமிழ்மணத்தில் புகுந்த நரி சிரிக்கின்றது. நாற்றங்களை அள்ளி வீசி சிரிக்கின்றது. அதுபற்றிய புலம்பல்தான்