Thursday, December 29, 2005

9.ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்

9.ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்
*************************************************

ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்
பத்திநின்ற சலமதுதான் தீயை யுண்ணும்
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்
வெத்திநின்ற கால்சென்று விண்ணை யுண்ணும்
விழுந்ததப்பா சடமென வேதாந்தப் பேச்சு
முத்திகண்டு கூடுவது மெந்தக் காலம்?
மூடரே மதுவையுண்டு மேல்பார்ப்ப தெக்காலம்?

2 Comments:

மு மாலிக் said...

எனக்கு சுத்தமாப் புரியலன்னாலும், புரிஞ்சமாதிரி வாய்விட்டு சத்தமாப் படிக்கிறதுக்கு நல்லா யிருக்கு.

பொன்னம்பலம் said...

அன்பு சகோதரரே!
ஆகாயத்தைக் காற்று சாப்பிடும். அந்தக் காத்தைத் தீ சாப்பிடும். அந்த தீயைத் தண்ணீர் சாப்பிடும். அந்த தண்ணீரை மண் சாப்பிடும்.

ஆகாயம், காற்று, தீ, தண்ணீர், மண் ஆகிய 5 பூதங்களையும் உள்ளே அடக்கி இருக்கும் ஓம் ஆகிய ஓங்காரம். அதுதான் மனிதனின் ஆவி, சீவன், ஆன்மா. இதெல்லாம் போனபின்னடி சடலம் விழுந்திருச்சுன்னு வேதாந்தம் பேசுறாங்களே!

மூடர்களே! தன் பார்வையை மேல்நோக்காக மாற்றி முத்திநிலைக்குப் போய் அமிர்தம்ன்னு சொல்லுற மதுவை எப்ப உண்ணப் போகிறீர்களோ? தெரியலியே!!!