Monday, March 22, 2010

சாமி யார்

திரும்பவும் அரைச்ச மாவையே நானும் அரைக்கப்போகிறேன். அதுதான் நித்தியாவைப் பத்தி.

முதலில் சாமி யார் எனத் தெரிந்தவந்தான் சாமியார். சும்மா காவி கட்டினவன் எல்லாம் சாமியார் இல்லை. அதே போல எல்லாத்தையும் விட்டுப்புட்டு ஓடினவனும் சாமியார் இல்லை. "துறவு" என்னும் சொல்லுக்கு அண்ணன் ஞானவெட்டியானின் ஞானக்குறள் 14ம் பாடல் விளக்கத்தைக் கொஞ்சம் படியுங்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/2-11-20.html

சாமி எங்கே உள்ளது?
பாம்பாட்டிச் சித்தர்:
**********************
அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!

இப்படிப்பட்ட வத்துவைக் காட்ட காவி கட்டினவனுக்கெல்லாம் வக்கு இல்லை; தெரியாது.

சரி பரவாயில்லை. அவர் ராஜகுரு; அதனால்தான் நாங்கள் பின்னால் சென்றோம் என்றால் என்னத்தைச் சொல்ல. குரு என்றால் இருளை நீக்கி ஒளியைத் தரும் வத்து. இதில் நல்ல குரு யார்? காண்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/blog-post_7375.html

நம்மிடம் ஒரு தேநீர்( அதுதாங்க single tea)வாங்கிக் குடிக்காதவனும், ஆடம்பரமாக உடை அணியாதவனும் வெளி வேடம்(தாடி,பட்டை,கொட்டை அதுவும் தங்கக் கொட்டை) போடாதவனாகவும், நான் இதைச்செய்வேன்-அதைச் செய்வேன் என முரசு அடிக்காதவனும் "நான் ஓர் கைகாட்டி; வழியைக் காட்டுவேன்; போகவேண்டியது உன்பாடு" என்னும் தன்னடக்கம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.

"யோகம்" என்றால் சூரிய, சந்திர, அக்கினி கலைகளின் புணர்ச்சி. ஆனால் நித்தியாவோ "யோகம்" என்னும் சொல்லைத் தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டார். அதுதாங்க இருபால் புணர்ச்சி. அதையே செய்து காட்டினார்.

இப்படிப்பட்டோரின் பின்னால் செல்லும் மூடத்தனத்தை இனிமேலாவது படித்தவர்கள், பணக்காரர்கள் விடுவார்களா?

பிகு: புலம்பல் பொன்னம்பலம் இங்கு வந்திருக்கிறார். தன்னுடைய பதிவு தமிழிஷ்ல் வரமாட்டேன் என்கிறது. நீங்கள் போடுங்கள் என்றார். பாஸ்வோர்டையும் தந்தார். அதனால் ஞானவெட்டியான் போட்டது என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் தமிழிஷ் எனக்கும் பிடிபடவில்லை. தொழில் நுட்ப அறிவு குறைவு. விளக்கமுடிந்தோர் தனி மின்னஞ்சலில் விளக்கினால் நல்லது.njaanam@gmail.com

7 Comments:

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் தமிழில் எழுத (nhm.com) டவுன் லோட் செயுங்கள் ...எழுதுங்கள் காபி பண்ணுங்கள் பேஸ்ட் செயுங்கள்

பொன்னம்பலம் said...

அன்பு hamaragana,
நான் எ-கலப்பை பயன்படுத்துகிறேன். அண்ணன் ஞானவெட்டியான் சொல்லிக்கொடுத்தது. இங்கு நான் கேட்ட சந்தேகம் என் இடுகையிலிருந்து தமிழிஷ், தமிழ்10 ஆகியவைகளுக்குப் பதிவை எப்படி அனுப்புவது என்பதே!

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் சத்தியமாக அது எப்படி என்று எனக்கு தெரியாது பொருதுகொள்க
நன்றி

பொன்னம்பலம் said...

அன்பு நண்பரே!
கவலையை விடுங்கள். நேற்று அண்ணன் ஞானவெட்டியானுக்கு நெஞ்சுவலி என்று கேள்விப்பட்டு பாக்கப் போயிருந்தேன். அவரிடம் புலம்பிவிட்டு வந்திருக்கேன். அவரும் நண்பர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம். வயதாகிவிட்டபின் இதுக்கு வந்தாலே இப்படியெல்லாம் வரும் என்று தெரியாமல் மாட்டிக்கிட்டேனே!

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்
அண்ணன் நெஞ்சு வலி குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் .

பொன்னம்பலம் said...

அன்பு நண்பரே,
தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.
இன்று காலையில் தொலைபேசியில் நலம் விசாரித்தேன். பரவாயில்லை என்று சொன்னார். அவரின் வயது 70. முன்னர் அவர் எழுதிய பதிவுகளையெல்லாம் படித்ததினால் ஏற்பட்ட மதிப்பின் காரணமாக அவரை என் உடன்பிறவா அண்ணனாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.
அவர் பதிவுகள் எல்லாம் http://siththan.com/ல் உள்ளது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்
உண்மையல் அவர்கள் பெரியவர்தான் ..அவர்களின் பதிவு படிக்கிறேன் பயன் பெறுகிறேன்.
நல்ல தொடர்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.