Friday, March 26, 2010

அம்மன் படு(த்து)ம் பாடு

நம்ம சன் டிவிலே சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30க்கு ஒலிபரப்பாகும் "அம்மன்" நாடகத்தைப் பத்தித்தானுங்க.

தொடக்கத்தில என்னமோ ஆன்மிகத் தொடர்போல காட்டினார்கள். வரவர ஒண்ணுமே சரியில்லை. நடுவுல "டீலா? நோடீலா?" வேற வந்துவிட்டதா? அது எப்ப முடியுதோ அப்பத் தான் அம்மன் வெளியே வரும். அதுவரை அம்மன் காத்துக்கிட்டே இருக்கணும்; அத்தோட பாத்துக்கிட்டு இருக்கிறவங்களும் காத்துக்கிட்டு இருக்கோணும். இதுதானுங்க கொடுமையோட ஆரம்பம்.

இப்பவெல்லாம் சாமி நாடகம்; பாப்போமின்னா. என்னத்தைச் சொல்ல. நாடகத்துக்கு முன்னாடி ஒரு நாட்டியம். இது என்ன வகை நாட்டியமோ? பேய் பிடித்ததைப் போல தலையில் ஒரு கையை வச்சுக்கிட்டு இன்னொரு கையை வேகமா ஆட்டிக்கிறது. இதுல காவியும் மஞ்சளும் உடை போட்டுக்கிட்டு தாம் தூம்முன்னு குதிக்கிறது.

முடிஞ்சதும் இதுவரைன்னு போட்டு இதுவரை வந்தவைகளில் (இயக்குனருக்கு)முக்கிய காட்சிகளை காட்டுறாங்க. ஒழிஞ்சு போன்னு விட்டுட்டா சும்மாவா இருக்குறாங்க. பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; பாலாயியோட குச்சி சத்தமும் பாக்குறப்ப குடுக்குற சத்தமும். அத்தோட விளம்பரம் வந்துரும்.

5 நிமிடத்துக்கு அப்புறம் பரணியை காட்டுவாங்க. கும்பாபிசேகத்துக்கு பண்ணுற யாகம் வளக்குறதைக் காட்டுவாங்க. உடனே பிளாஷ்பாக். யானையிலே வர்ரதும், சண்டியை சூலாயிதத்தால குத்துறதும் அப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்கிறதும் தான். அப்புறம், ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; அப்புறம் விளம்பரம்.

5 நிமிடத்துக்கு அப்புறம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவா வந்து தஸ்புஸ்ஸுன்னு 5 வாக்கியம் இங்கிலீஷுலே பேசுவாங்க. அப்புறம் கொலை, காணாமல் போனவனுடைய கதை, பரணியோட பேசினது எல்லாம் பிளாஷ்பாக். பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு.

அப்புறம்தான் கதை நகரும். 5 வாக்கியம் புதுசா பேசுவாங்க. அதுக்கு நடு நடுவுல பிளாஷ்பாக். என்ன கொடுமைடா ஐயா? இந்த5 வாக்கியத்துக்காக 30 நிமிடம் உக்கார வச்சு கண்ணைக் கெடுத்து, தூக்கத்தைக் கெடுத்து, நேரத்தையும் வீணடிக்கணுமா?

ஐயா, டிவி காரரே! ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்காளேன்னு பாக்காதீங்க. அவ பொறுமை இழந்து எந்திரிச்சுப் போயிட்டா கதை கந்தலாயிரும். சாரதா தேவின்னு கதைவிட்டுக்கிட்டே இருக்கிறது எப்படி இருக்கு தெரியுமா?
பாம்பு பிடாரன் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கு.

ஆன்மிகத் தொடராச்சேன்னு பாக்குறவங்களை எல்லாம் வெறுப்பு ஏத்தி நாத்திகர்களாக மாத்தணும்ன்னு பாக்கிறாப்பலேல்ல இருக்கு. எங்க பொறுமையை சோதிக்காதீங்க. அம்மனை வச்சு காசு பண்றதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதுக்காக லட்சக் கணக்காணவர்களின் பொன்னான நேரத்தை கெடுக்காதீங்க. அவங்க பொறுமையையும் சோதிக்காதீங்க.

நான் புலம்பி என்னா ஆகப்போகுது. நீங்க திருந்த மாட்டீங்களே.

4 Comments:

Unknown said...

கொடுமைங்க

பொன்னம்பலம் said...

ஆமாங்க

துளசி கோபால் said...

அடி ஆத்தீ............
இம்புட்டுமா நடக்குது?


விண்ணப்பம்: மட்டுறுத்தலை வச்சுக்குங்கோ. வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்கோ.

ஆத்தா..சொன்னா.....கேட்டுக்கணும்.ஆமா:-))))

பொன்னம்பலம் said...

சரி ஆத்தா.
செஞ்சுட்டேன்.