Monday, March 22, 2010

சாமி யார்

திரும்பவும் அரைச்ச மாவையே நானும் அரைக்கப்போகிறேன். அதுதான் நித்தியாவைப் பத்தி.

முதலில் சாமி யார் எனத் தெரிந்தவந்தான் சாமியார். சும்மா காவி கட்டினவன் எல்லாம் சாமியார் இல்லை. அதே போல எல்லாத்தையும் விட்டுப்புட்டு ஓடினவனும் சாமியார் இல்லை. "துறவு" என்னும் சொல்லுக்கு அண்ணன் ஞானவெட்டியானின் ஞானக்குறள் 14ம் பாடல் விளக்கத்தைக் கொஞ்சம் படியுங்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/2-11-20.html

சாமி எங்கே உள்ளது?
பாம்பாட்டிச் சித்தர்:
**********************
அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!

இப்படிப்பட்ட வத்துவைக் காட்ட காவி கட்டினவனுக்கெல்லாம் வக்கு இல்லை; தெரியாது.

சரி பரவாயில்லை. அவர் ராஜகுரு; அதனால்தான் நாங்கள் பின்னால் சென்றோம் என்றால் என்னத்தைச் சொல்ல. குரு என்றால் இருளை நீக்கி ஒளியைத் தரும் வத்து. இதில் நல்ல குரு யார்? காண்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/blog-post_7375.html

நம்மிடம் ஒரு தேநீர்( அதுதாங்க single tea)வாங்கிக் குடிக்காதவனும், ஆடம்பரமாக உடை அணியாதவனும் வெளி வேடம்(தாடி,பட்டை,கொட்டை அதுவும் தங்கக் கொட்டை) போடாதவனாகவும், நான் இதைச்செய்வேன்-அதைச் செய்வேன் என முரசு அடிக்காதவனும் "நான் ஓர் கைகாட்டி; வழியைக் காட்டுவேன்; போகவேண்டியது உன்பாடு" என்னும் தன்னடக்கம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.

"யோகம்" என்றால் சூரிய, சந்திர, அக்கினி கலைகளின் புணர்ச்சி. ஆனால் நித்தியாவோ "யோகம்" என்னும் சொல்லைத் தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டார். அதுதாங்க இருபால் புணர்ச்சி. அதையே செய்து காட்டினார்.

இப்படிப்பட்டோரின் பின்னால் செல்லும் மூடத்தனத்தை இனிமேலாவது படித்தவர்கள், பணக்காரர்கள் விடுவார்களா?

பிகு: புலம்பல் பொன்னம்பலம் இங்கு வந்திருக்கிறார். தன்னுடைய பதிவு தமிழிஷ்ல் வரமாட்டேன் என்கிறது. நீங்கள் போடுங்கள் என்றார். பாஸ்வோர்டையும் தந்தார். அதனால் ஞானவெட்டியான் போட்டது என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் தமிழிஷ் எனக்கும் பிடிபடவில்லை. தொழில் நுட்ப அறிவு குறைவு. விளக்கமுடிந்தோர் தனி மின்னஞ்சலில் விளக்கினால் நல்லது.njaanam@gmail.com

Sunday, March 21, 2010

திரும்பிவந்த கதை

என் மகன் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனதினால கம்புயூடர் சும்ம கெடந்திச்சா? அப்ப ஹரி வந்து வெட்டியா பொழுது போக்காதீங்க மாமா; நான் எல்லாம் செஞ்சு தாரேன்னு சொல்லிப் பழய புளாக்கிலே இருந்து புதுசுக்கு மாத்திக்கொடுத்து அக்கம் பக்கம் வெட்டி அரட்டை அடிக்காம "ஏதாச்சும் புலம்பிக்கிட்டே இருங்க" அப்படின்னான். வலைபதிய திரும்பி வந்துட்டேன்.

என்னத்தைச் சொல்வேண்டா தம்பி? என்னத்தைச் சொல்வேன்?

எங்கே இருந்து ஆரம்பிக்கிறதுன்னு மரத்தடி (கிழ)நண்பர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் மும்மரமாக அவர்கள் "நித்தியா"வைப் பத்தித்தான் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்னை ஒரு பயலும் கண்டுக்கலை.

ம்ம்ம்ம்ம் என்ன செய்வேன்!

Sunday, March 14, 2010

வரலாமா?

நான் காணாமல் போன உடன் மகிழ்ச்சி அடைந்த நண்பர்களே!

ம்ம்ம்ம் 4 வருடங்களாகி விட்டது உங்களைப் பார்த்து. சரி பழயபடி கொஞ்சம் புலம்பலாமேன்னு நப்பாசை. ஏதோ வந்துவிட்டேன்; புலம்புகிறேன்.

சகித்துக் கொள்ளத்தான் வேணும்.

வரலாமில்ல.