அண்ணே!
"உலவு.காம்" ன்னு ஒண்ணு இருந்துச்சே!
அது ரெண்டு நாளா எங்கே போச்சுன்னே தெர்யலியே!
அந்த urlஅடிச்சா.
Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.
Apache/2.2.14 (Unix) mod_ssl/2.2.14 OpenSSL/0.9.8e-fips-rhel5 mod_auth_passthrough/2.1 mod_bwlimited/1.4 FrontPage/5.0.2.2635 Server at ulavu.com Port 80
இப்படி வருதே.
என்ன பண்ணுறது?
Wednesday, March 31, 2010
உலவு எங்கே போச்சு
Posted by பொன்னம்பலம் at 5:21 PM 3 comments
Sunday, March 28, 2010
தமிழிஷ் வழி பதிவுலகம் கண்காணிக்கப்படுகிறது!!!
அத்திரி பாச்சா கொழுக்கட்டைன்னானாம்.
சின்னத் திரை உலகம் தமிழிஷ் வழியாக பதிவுலத்தைக் கண்காணிக்கிறார்கள்.
"அம்மன் படு(த்து)ம் பாடு" ன்னு ஒரு பதிவு போட்டோமா. அதை "தமிழிஷ்" வழியாப் படித்த நம்ம சன் டிவிக்காரர்கள் படிச்சு சுதாரிச்சுக்கிட்ட மாதிரி தெரியுதுங்க. ஆத்தா எந்திரிச்சுப் போயிடுவான்ன உடனே "மக்கள் விழித்திருகிறார்கள்" ங்குற பயம் வந்துருச்சோ என்னமோ?
நேற்றைய ஒலி பரப்பில் பிளாஷ் பாக் இல்லை. ஆனால் எழுத்து போடும்போது இருக்கும் அலங்கோல நடனம் இன்னுமும் இருக்குங்க. ஆரவல்லி, சிகண்டி சிரிப்புக்கூட 3 இடத்துலேதாங்க வருது. கதை கொஞ்சம் வேகமாக நகந்துருக்குது.
ஆக ஒண்ணு மட்டும் தெளிவாத் தெரியுது. பதிவுலக இடுகைகள் எல்லாத் தரப்பினராலும் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் கருத்துக்களுக்கு இன்னும் மதிப்பு இருக்குது.
Posted by பொன்னம்பலம் at 11:47 AM 0 comments
Friday, March 26, 2010
அம்மன் படு(த்து)ம் பாடு
நம்ம சன் டிவிலே சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30க்கு ஒலிபரப்பாகும் "அம்மன்" நாடகத்தைப் பத்தித்தானுங்க.
தொடக்கத்தில என்னமோ ஆன்மிகத் தொடர்போல காட்டினார்கள். வரவர ஒண்ணுமே சரியில்லை. நடுவுல "டீலா? நோடீலா?" வேற வந்துவிட்டதா? அது எப்ப முடியுதோ அப்பத் தான் அம்மன் வெளியே வரும். அதுவரை அம்மன் காத்துக்கிட்டே இருக்கணும்; அத்தோட பாத்துக்கிட்டு இருக்கிறவங்களும் காத்துக்கிட்டு இருக்கோணும். இதுதானுங்க கொடுமையோட ஆரம்பம்.
இப்பவெல்லாம் சாமி நாடகம்; பாப்போமின்னா. என்னத்தைச் சொல்ல. நாடகத்துக்கு முன்னாடி ஒரு நாட்டியம். இது என்ன வகை நாட்டியமோ? பேய் பிடித்ததைப் போல தலையில் ஒரு கையை வச்சுக்கிட்டு இன்னொரு கையை வேகமா ஆட்டிக்கிறது. இதுல காவியும் மஞ்சளும் உடை போட்டுக்கிட்டு தாம் தூம்முன்னு குதிக்கிறது.
முடிஞ்சதும் இதுவரைன்னு போட்டு இதுவரை வந்தவைகளில் (இயக்குனருக்கு)முக்கிய காட்சிகளை காட்டுறாங்க. ஒழிஞ்சு போன்னு விட்டுட்டா சும்மாவா இருக்குறாங்க. பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; பாலாயியோட குச்சி சத்தமும் பாக்குறப்ப குடுக்குற சத்தமும். அத்தோட விளம்பரம் வந்துரும்.
5 நிமிடத்துக்கு அப்புறம் பரணியை காட்டுவாங்க. கும்பாபிசேகத்துக்கு பண்ணுற யாகம் வளக்குறதைக் காட்டுவாங்க. உடனே பிளாஷ்பாக். யானையிலே வர்ரதும், சண்டியை சூலாயிதத்தால குத்துறதும் அப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்கிறதும் தான். அப்புறம், ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; அப்புறம் விளம்பரம்.
5 நிமிடத்துக்கு அப்புறம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவா வந்து தஸ்புஸ்ஸுன்னு 5 வாக்கியம் இங்கிலீஷுலே பேசுவாங்க. அப்புறம் கொலை, காணாமல் போனவனுடைய கதை, பரணியோட பேசினது எல்லாம் பிளாஷ்பாக். பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு.
அப்புறம்தான் கதை நகரும். 5 வாக்கியம் புதுசா பேசுவாங்க. அதுக்கு நடு நடுவுல பிளாஷ்பாக். என்ன கொடுமைடா ஐயா? இந்த5 வாக்கியத்துக்காக 30 நிமிடம் உக்கார வச்சு கண்ணைக் கெடுத்து, தூக்கத்தைக் கெடுத்து, நேரத்தையும் வீணடிக்கணுமா?
ஐயா, டிவி காரரே! ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்காளேன்னு பாக்காதீங்க. அவ பொறுமை இழந்து எந்திரிச்சுப் போயிட்டா கதை கந்தலாயிரும். சாரதா தேவின்னு கதைவிட்டுக்கிட்டே இருக்கிறது எப்படி இருக்கு தெரியுமா?
பாம்பு பிடாரன் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கு.
ஆன்மிகத் தொடராச்சேன்னு பாக்குறவங்களை எல்லாம் வெறுப்பு ஏத்தி நாத்திகர்களாக மாத்தணும்ன்னு பாக்கிறாப்பலேல்ல இருக்கு. எங்க பொறுமையை சோதிக்காதீங்க. அம்மனை வச்சு காசு பண்றதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதுக்காக லட்சக் கணக்காணவர்களின் பொன்னான நேரத்தை கெடுக்காதீங்க. அவங்க பொறுமையையும் சோதிக்காதீங்க.
நான் புலம்பி என்னா ஆகப்போகுது. நீங்க திருந்த மாட்டீங்களே.
Posted by பொன்னம்பலம் at 11:41 AM 4 comments
Labels: அம்மன்
Monday, March 22, 2010
சாமி யார்
திரும்பவும் அரைச்ச மாவையே நானும் அரைக்கப்போகிறேன். அதுதான் நித்தியாவைப் பத்தி.
முதலில் சாமி யார் எனத் தெரிந்தவந்தான் சாமியார். சும்மா காவி கட்டினவன் எல்லாம் சாமியார் இல்லை. அதே போல எல்லாத்தையும் விட்டுப்புட்டு ஓடினவனும் சாமியார் இல்லை. "துறவு" என்னும் சொல்லுக்கு அண்ணன் ஞானவெட்டியானின் ஞானக்குறள் 14ம் பாடல் விளக்கத்தைக் கொஞ்சம் படியுங்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/2-11-20.html
சாமி எங்கே உள்ளது?
பாம்பாட்டிச் சித்தர்:
**********************
அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!
உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!
இப்படிப்பட்ட வத்துவைக் காட்ட காவி கட்டினவனுக்கெல்லாம் வக்கு இல்லை; தெரியாது.
சரி பரவாயில்லை. அவர் ராஜகுரு; அதனால்தான் நாங்கள் பின்னால் சென்றோம் என்றால் என்னத்தைச் சொல்ல. குரு என்றால் இருளை நீக்கி ஒளியைத் தரும் வத்து. இதில் நல்ல குரு யார்? காண்க:
http://sivayasiva.blogspot.com/2007/12/blog-post_7375.html
நம்மிடம் ஒரு தேநீர்( அதுதாங்க single tea)வாங்கிக் குடிக்காதவனும், ஆடம்பரமாக உடை அணியாதவனும் வெளி வேடம்(தாடி,பட்டை,கொட்டை அதுவும் தங்கக் கொட்டை) போடாதவனாகவும், நான் இதைச்செய்வேன்-அதைச் செய்வேன் என முரசு அடிக்காதவனும் "நான் ஓர் கைகாட்டி; வழியைக் காட்டுவேன்; போகவேண்டியது உன்பாடு" என்னும் தன்னடக்கம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.
"யோகம்" என்றால் சூரிய, சந்திர, அக்கினி கலைகளின் புணர்ச்சி. ஆனால் நித்தியாவோ "யோகம்" என்னும் சொல்லைத் தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டார். அதுதாங்க இருபால் புணர்ச்சி. அதையே செய்து காட்டினார்.
இப்படிப்பட்டோரின் பின்னால் செல்லும் மூடத்தனத்தை இனிமேலாவது படித்தவர்கள், பணக்காரர்கள் விடுவார்களா?
பிகு: புலம்பல் பொன்னம்பலம் இங்கு வந்திருக்கிறார். தன்னுடைய பதிவு தமிழிஷ்ல் வரமாட்டேன் என்கிறது. நீங்கள் போடுங்கள் என்றார். பாஸ்வோர்டையும் தந்தார். அதனால் ஞானவெட்டியான் போட்டது என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் தமிழிஷ் எனக்கும் பிடிபடவில்லை. தொழில் நுட்ப அறிவு குறைவு. விளக்கமுடிந்தோர் தனி மின்னஞ்சலில் விளக்கினால் நல்லது.njaanam@gmail.com
Posted by பொன்னம்பலம் at 11:16 AM 7 comments
Sunday, March 21, 2010
திரும்பிவந்த கதை
என் மகன் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனதினால கம்புயூடர் சும்ம கெடந்திச்சா? அப்ப ஹரி வந்து வெட்டியா பொழுது போக்காதீங்க மாமா; நான் எல்லாம் செஞ்சு தாரேன்னு சொல்லிப் பழய புளாக்கிலே இருந்து புதுசுக்கு மாத்திக்கொடுத்து அக்கம் பக்கம் வெட்டி அரட்டை அடிக்காம "ஏதாச்சும் புலம்பிக்கிட்டே இருங்க" அப்படின்னான். வலைபதிய திரும்பி வந்துட்டேன்.
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி? என்னத்தைச் சொல்வேன்?
எங்கே இருந்து ஆரம்பிக்கிறதுன்னு மரத்தடி (கிழ)நண்பர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் மும்மரமாக அவர்கள் "நித்தியா"வைப் பத்தித்தான் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்னை ஒரு பயலும் கண்டுக்கலை.
ம்ம்ம்ம்ம் என்ன செய்வேன்!
Posted by பொன்னம்பலம் at 9:26 AM 1 comments
Sunday, March 14, 2010
வரலாமா?
நான் காணாமல் போன உடன் மகிழ்ச்சி அடைந்த நண்பர்களே!
ம்ம்ம்ம் 4 வருடங்களாகி விட்டது உங்களைப் பார்த்து. சரி பழயபடி கொஞ்சம் புலம்பலாமேன்னு நப்பாசை. ஏதோ வந்துவிட்டேன்; புலம்புகிறேன்.
சகித்துக் கொள்ளத்தான் வேணும்.
வரலாமில்ல.
Posted by பொன்னம்பலம் at 5:52 PM 8 comments
Monday, February 27, 2006
Monday, January 02, 2006
11. "இப்படியாக" - கருத்துகள்
அன்புடைய நண்பர் தங்கமணி அவர்களுக்கு,
உங்களுடைய தலைப்புப் பதிவைப் பார்த்தேன். அதில் உள்ள சில பாயிண்டுகள் குறித்து என் கருத்தைச் சொல்லலாம்ன்னு பாக்கிறேன்.
// ஊழலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஊழலுக்கான சாத்தியங்களாக நான் காண்கிற, உள்ளே ஏழ்மை நிறைந்த, புளுத்துப்போன, உள்ளீடற்ற, அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகள் எப்படி இன்றைய கல்வி முறையால், மதத்தால், அரசியலால் உண்டாக்கப்படுகின்றன என்றே பேசவிரும்புகிறேன்.//
ஊழலைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை; ஏன். அது, கடவுள்போல் "அங்கிங்கெனாதபடி" பரவி புரையோடி இருக்குல்ல.
உள்ளே ஏழ்மை நிறைந்த, புளுத்துப்போன, உள்ளீடற்ற, அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகளால் ஏற்படுகின்றன. இன்றைய கல்வி முறையால், மதத்தால், மனிதன் அப்பிடி மாறலீங்க. அப்பறம் சொல்லி இருக்கீங்கல்ல அரசியல், அதாலதான் மனிதன் முதுகெலும்பு இல்லாம போயிட்டான்.
அப்புறம் ஒரு ரோடு போட்டா, மொத்த காண்டராக்ட் பணத்தில சத்தமில்லம 10% அந்த பகுதி மந்திரிக்கும், 5% மாவட்டத்துக்கும், 3%வட்டத்துக்கும்,2% சேர்மனுக்கும்,1% பஞ்சாயத்துத் தலைவருக்கும் போயிறுது. 21% போனப்புறம், இந்த காண்டிராக்ட் அந்த தலைவரின் தம்பிக்கோ, சேர்மனின் தம்பிக்கோ போயிருது. அதுல அவரு லாபம் 20%. இது இல்லாம நம்ம அரசு அதிகாரிகளுக்கும் குடுக்க வேண்டாமா? அதுக்கு ஒரு 19%. அப்புறம் எவ்வளவு மிச்சமுங்க. 40%. அதுலதான் ரோடு போடணூம். அது எத்தினி நாளைக்குத் தாங்கும்.
இவ்வளவும் தெரிஞ்சும் ஏங்க சும்மா இருக்கிறீங்க?ன்னு கேப்பீங்க. நான் பொண்டாட்டி புள்ளைக் காரனுங்க. மந்திரி போலீஸைக் கூப்பிட்டுச் சொன்னா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல. "***" கேசுல உள்ள தள்ளிருவாங்க. அப்பறம், தடிக்குச்சியோட ஆளுங்க வீட்ல வந்து போட்டு நொறுக்கிருவாங்க. மத்தவங்க, அதாங்க முதுகெலும்பு இல்லாதவங்க, பாத்துக்கிட்டு இருப்பாங்க.
இதத்தாங்க நீங்க "அச்சம் நிரம்பிய, சுயமரியாதை அற்ற மனித இருப்புகள்" அப்பிடின்னு சொல்றீங்க. இது கல்வி முறையால் இல்லீங்க. மதத்தால் இல்லீங்க. அரசியலால்தானுங்க.
சரி நாம இதை எப்பிடி ஒழிக்கப்போறோம்?
//ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள், ஒரு பிறப்பு இறப்புச்சான்றிதழ் பெறுவதற்கான இறுதி செய்யப்பட்ட வழிமுறைகள் ஒரு குடிமகனின் மொழியில் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.//
இருக்கே. உங்களுக்குத்தான் தெரியலீங்க. VAOக்கு பத்து ரூபாய். ரெவெனியூ இன்ஸ்பெக்டருக்கு 20/-. தாசீல்தாருக்கு 100/-. அடுத்த நாளே வாங்கிறலாமுல்ல.
//தெய்வத்தின் குரல், நூறு வகையான அசைவச் சமையல், மனையடி சாஸ்திரங்கள், அர்த்தமுள்ள இந்துமதம்/ இனிய இஸ்லாம் போன்ற போலியான தகவல்கள் மக்கள் தங்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களைப் பெறுவதை மறித்து நிற்கின்றன.//
நூறு வகையான அசைவச் சமையல் படிச்சா நம்ம வீட்டில செஞ்சு சாப்டலாம்.
"தெய்வத்தின் குரல், அர்த்தமுள்ள இந்துமதம்/ இனிய இஸ்லாம் போன்ற போலியான தகவல்கள்" - ஒருத்தருக்குப் போலியாத் தெரியிறது மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். போலியானது என ஒட்டு மொத்தமா சொன்னா, அது எப்பிடீங்க. அதையும் அவுங்க அவுங்க புளாக்கிலதனே போடுறாங்க. தமிழ்மணத்தில வருகிற தலைப்பைப் பாத்து அது நமக்குப் புடிக்குதான்னு பாத்து அப்புறம்தான் உள்ளே வாராங்க. என்னோட "புலம்பல்" புளாக்குக்கு ஒருத்தரும் வாரதில்லே. நானும் புலம்ப்பிறதை நிறுத்திறதில்லே. அதுமாதிரி அரசியல் புடிச்சா அங்கேயும், காதல் புடிச்சா அங்கேயும் போறாங்க. இது எப்பிடிங்க மொத்த மனித இருப்புக்களைக் கெடுக்க முடியும்.
சாக்ரடீஸ் சொன்னானாம். "நான் என்ன கட்டிளங் காளையா; அல்லது இவர்கள் என்ன கன்னிப் பொண்களா? இவர்களை நான் கெடுக்க."
// பொதுத்தளத்தில் இருந்து அகற்றப்படவேண்டிய விசயங்களான ஆன்மீகம்//
வேண்டாமண்ணே. ஏதோ அதைப் படிச்சுத்தான் மக்கள் ஆறுதலைடையுறாங்க.
// மதத்தின் இருப்பு எப்படி இன்னும் சாத்தியமாகிறது, அதற்கான தேவை எப்படி கட்டமைக்கப்படுகிறது; அது எப்படி மனிதனுக்கு எதிரானது, அவனது ஆன்மீக விடுதலையை அது எப்படி முடக்குகிறது என்பது பற்றியே பேச, பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.//
மதம் இருக்கட்டுமண்ணே. அது மனுசனுக்கு எதிராளி இல்லை. ஆனா, மதத்தோட பேர வச்சிக்கிட்டு வம்பு பண்ணுறவனைக் கவனிக்கணுமண்ணே!. மதம் அடிப்படையான பல விஷயங்களச் சொல்லுது. அதனால மனம் பக்குவப்படுது. அவனோட "ஆன்மீக விடுதலை"க்கு வழி சொல்லுது; முடக்கலை.
ஆனா, அதுக்குள்ள, நான் அந்த சாதி, நீ அந்த சாதி அப்பிடிங்கிறதை மொதல்ல ஒழிப்போமண்ணே! அது செஞ்ச்சாலே பாதி குளோஸ். மீதி டிவிப் பொட்டிங்க. அத எண்ண பண்றதுதான்னு தெரியல.
ஏதோ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குச் சொல்லணுமுன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
அதிகமா படிக்கலைங்க. அதுனால, வாக்குவாதத்துக்கு வல்ல.
Posted by பொன்னம்பலம் at 5:56 PM 6 comments
Saturday, December 31, 2005
10.புதுப் பாதை
வெட்டுண்ட கையும் வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டு வணங்கும் கன்னியர்கள் பொன்னடியை
கூன்விழுந்த மானிடர்கள் குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள் தலைமுறையில் வாராதோ?
பொழுது விடியதோ? புதுப்பாதை தோன்றாதோ?
அழுதழுது கன்னியர்கள் அலறும்நாள் மாறாதோ?
பழுதுபடா உத்தமனே பண்புமிகும் கண்ணியனே!
விழுதுவிட வைத்த மரம் விழுந்துவிடல் சம்மதமோ?
Posted by பொன்னம்பலம் at 12:48 PM 0 comments
Thursday, December 29, 2005
9.ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்
9.ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணையுண்ணும்
*************************************************
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்
பத்திநின்ற சலமதுதான் தீயை யுண்ணும்
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்
வெத்திநின்ற கால்சென்று விண்ணை யுண்ணும்
விழுந்ததப்பா சடமென வேதாந்தப் பேச்சு
முத்திகண்டு கூடுவது மெந்தக் காலம்?
மூடரே மதுவையுண்டு மேல்பார்ப்ப தெக்காலம்?
Posted by பொன்னம்பலம் at 7:23 PM 2 comments
Wednesday, December 28, 2005
7காலம் போற போக்கைப் பாத்தா
7.காலம் போற போக்கைப் பாத்தா
*************************************
காலம் போற போக்கைப் பாத்தா
யாரு பேச்சைக் கேட்பது?
கவலைப்பட்டு என்ன பண்ண
ஆனபடி ஆகுது!
கரும்பினிலும் நுனிக்கரும்பு
வேம்புபோலக் கசக்குது!
கருணையுள்ள நெஞ்சங்கூட
தரும வாழ்வை வெறுக்குது!
இரும்புகூட நெருப்பில் போட்டால்
மெழுகுபோல உருகுது!
இரண்டு எண்ணங்கொண்ட நெஞ்சில்
இன்பதுன்பம் பெருகுது!
வேங்கை ஒன்று மாமிசத்தை
வெறுத்ததாகக் கூறுது!
வெள்ளாடு சைவங்கெட்டு
வேறுபாதை போகுது!
வாழ்ந்த வாழ்வு சலிக்கும்போது
மாற்றும் எண்ணம் தோணுது!
வாடைக் காற்றில் நடுங்கும் நெஞ்சு
கோடைக்காக ஏங்குது!
ஏன் பிறந்தான் பாவி என்று
சிலரைப் பார்த்து ஏசுது!
இறந்துவிட்டான் தேவன் என்று
சிலரை எண்ணி ஏங்குது!
******** கவிஞர் கண்ணதாசன்
Posted by பொன்னம்பலம் at 9:30 PM 0 comments
Tuesday, December 27, 2005
6.பாழான மாய்கை சென்ற
6.பாழான மாய்கை சென்ற
****************************
6.பாழான மாய்கை சென்றொழிவ தெப்போ?
பரந்த மனம் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே! ஐயோ!!
காழான உலகம் அதன் ஆசையெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவதும் ஏது? மூலம் பார்ப்பதெப்போ?
Posted by பொன்னம்பலம் at 12:28 PM 0 comments
Monday, December 26, 2005
ஓட்டுப் போட முடியலே
யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு தப்பித் தவறி ஓட்டுப் போடப் பாத்திருக்கார். அது தமிழ்மணத்தில் முடியலியாம். உரியவுங்க பாத்து ஏதாச்சும் செய்ய முடியுமா? ஒரு ஓட்டு கெடைக்கிறதும் போச்சே?
Posted by பொன்னம்பலம் at 9:59 PM 12 comments
Thursday, December 22, 2005
4.நரி ஒன்று சிரிக்கிறது!
4.நரி ஒன்று சிரிக்கிறது! - அது நினைத்தது நடக்கிறது
தந்திரம் பலித்தபின் தவறுகள் வென்றபின் தண்டனை கிடைக்கிறது!!
அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒரு நாள்
படுத்தபின் எழமாட்டான்; அவனது கணக்கை
ஐந்தொகை போட்டு ஆண்டவன் விடமாட்டான்!!
பலருக்குச் சிலகாலம் - எதுவும் சிலருக்குப் பலகாலம்
எவருக்கும் ஒருகாலம் - உண்மை வெளிவரும் எதிர்காலம்!!
**** கவியரசு
Posted by பொன்னம்பலம் at 9:09 PM 2 comments
3.மாறாதையா! மாறாது!
3.மாறாதையா! மாறாது!
**************************
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!
காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வைச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின்மேல் நிக்கவைச்சாலும்
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!
***** கவியரசு
Posted by பொன்னம்பலம் at 5:55 PM 1 comments
2.நாய், நரி, புலி
2.நாய், நரி, புலி
****************
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை.
***** கவியரசு
Posted by பொன்னம்பலம் at 5:50 PM 0 comments
Monday, November 21, 2005
1.ஆடிய ஆட்டம்
1.ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
---- கவியரசு
Posted by பொன்னம்பலம் at 7:54 PM 2 comments




